மதுரை பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. இதனிடையே போட்டியில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிட்டதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் 16 ஆண்டுகளுக்கு பின் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீ ஊர் காவலன் உற்சவ விழாவை ஒட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகளும், 479 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்த காளைகளை, மாடு பிடி வீரர்கள் லாவகமாக பிடித்து அடக்கினர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
16 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதால் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் ஜல்லிக்கட்டை ஆர்வத்துடன் ரசித்தனர். இதனிடையே போட்டியில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகள், அருகிலுள்ள பசும்பொன் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிட்டதாக அங்கு வசிப்போர் கவலை தெரிவித்துள்ளனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்