நாங்கள் கூறும் உண்மையை தடுக்க முடியாது: ராகுல்காந்தி ஆவேசம்!

நாங்கள் கூறும் உண்மையை தடுக்க முடியாது: ராகுல்காந்தி ஆவேசம்!
நாங்கள் கூறும் உண்மையை தடுக்க முடியாது: ராகுல்காந்தி ஆவேசம்!

உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா இருந்த போதும், கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் பேசிய ராகுல், உண்மைக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடி வருவதாகக் கூறினார். நாட்டிற்காக குரல் கொடுக்கும் கட்சி காங்கிரஸ் தான் என்றார். பாஜக ஒரு அமைப்புக்காக குரல் கொடுப்பதாக புகார் தெரிவித்த ராகுல், ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் காங்கிரசின் பங்கு உள்ளதாகக் கூறினார். உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா இருந்த போதும், கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
 
வங்கிகளில் பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிப்போரை மோடி அரசு காப்பாற்றுவதாக தெரிவித்த அவர், மக்களின் சேவகனாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருவதாகவும், செல்வந்தர்களின் காப்பாளனாக பாரதிய ஜனதா கட்சி செயல்படுவதாகவும் குறை கூறினார். முக்கியப் பிரச்னைகளில் அனைத்திலும் பிரதமர் மோடி மவுனம் காத்து வருவதாக குறிப்பிட்ட ராகுல், காங்கிரஸ் கட்சி உண்மையைப் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார். பழங்குடியினரின் வனம் அவர்களிடமிருந்து பறிக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com