[X] Close

பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி, 46 பேர் காயம்!

10-killed--46-injured-in-Sitamarhi-bus-accident

பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயமடைந்தனர்.

பிகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள முஸாபர்பூரில் இருந்து அவுராய் என்ற ஊருக்கு தனியார் பயணிகள் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பன்ஸ்பட்டி என்ற கிராமத்தின் அருகில் வந்துகொண்டிருந்த போது நிலைதடுமாறி பாலத்தில் இருந்து விழுந்தது. இதில் பஸ்சில் பயணித்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 46 பேர் படுகாயமடைந்தனர். 

தகவல் தெரிந்து வந்த போலீசாரும் உள்ளூர்க்காரர்களும் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close