ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் சென்னை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில், பெங்களூரு எஃப்.சி அணியை சென்னை எஃப்.சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
போட்டி தொடங்கிய 12வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி முதல் கோலை அடித்தார். 20வது நிமிடத்தில் சென்னை அணியின் மைல்சன் ஆல்வ்ஸ் கோல் அடிக்க சமநிலையை எட்டியது. 48வது நிமிடத்தில் மைல்சன் ஆல்வ்ஸ் மீண்டும் ஒரு கோல் அடிக்க முதல் பாதியில் சென்னை அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் சென்னை மற்றும் பெங்களூரு அணி தலா ஒரு கோல் அடித்தது. இதனால் சென்னையின் எஃப்சி அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், முதல் அணியாக இரண்டாவது முறை சென்னை எஃப்சி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சென்னை அணி வெற்றி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். டுவிட்டரில் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை போல் கால்பந்திலும் சென்னை அணி சாம்பியன் என பலரும் குஷியாக மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
Loading More post
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!