இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி போட்டியில் இந்தியா, வங்கதேசம் நாளை மோதுகின்றன.
இந்த தொடரில், இந்திய அணியை பொறுத்தவரை முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கபட்டு இளம் வீரர்களோடு களம் இறங்கியது. அதற்கேற்றார் போல வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோர் தங்களுக்கான வாய்ப்பை சிறப்பாகவே பயன்படுத்தி கொண்டனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா தொடரில் இடம் பிடித்த ரெய்னாவும் பேட்டிங்கில் அணிக்கு தேவையான போது அதிரடியாக விளையாடி ரன் சேர்க்கிறார்.
இத்தொடரில் ரன் சேர்க்க முடியாமல் தவித்த கேப்டன் ரோகித் ஷர்மாவும் கடந்த போட்டியில் அரை சதம் அடித்து இருப்பது கூடுதல் பலம். வங்கதேசத்தை பொருத்தவரை தொடக்க ஆட்டகாரர் தமிம் இஃபால் தொடகத்திலே கட்டுபடுத்துவது அவசியம். கடந்த போட்யில் 18 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட முகமதுல்லாவும், முஷிஃபிகுர் ரஹிம் இருவரும் அந்த அணியின் துண்களாக விளங்குகிறார்கள். அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் அணிக்கு திரும்பி இருப்பது அந்த அணியின் கூடுதல் பலம். இரு அணிகளுமே சமபலத்துடன் விளங்குவதால் நாளைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'மொழி அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்' - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்