தினசரி காலை 10:50 மணிக்கு தேசிய கீதம் பாடும் பெங்கால் கிராமம்

தினசரி காலை 10:50 மணிக்கு தேசிய கீதம் பாடும் பெங்கால் கிராமம்
தினசரி காலை 10:50 மணிக்கு தேசிய கீதம் பாடும் பெங்கால் கிராமம்

மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் அபய்நகர். அந்த ஊரில் உள்ள அனைவரும் தினமும் காலை 10.50 மணிக்கு 52 வினாடிகள் எந்த வேலையிலும் ஈடுபடாமல், மிகுந்த உற்சாகத்தோடு எழுந்து நிற்கின்றனர். என்ன இது ஊரே 52 வினாடிகள் எழுந்து நிற்கிறதா ?

ஆமாம், அபய்நகரில் 150 மாணவர்கள் படிக்கும் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் உள்ள 2 பெரிய ஸ்பீக்கர்களில் காலை சரியாக 10.50 மணிக்கு தேசிய கீதம் ஒலிக்கும். தேசிய கீதம் இசைக்கப்படும் சத்தம் கேட்டால் போதும். ஊரில் உள்ள அனைவரும் செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே விட்டுவிட்டு, அதற்கு மரியாதை செய்கின்றனர்.

இதுதொடர்பாக அந்த பள்ளி தலைமை ஆசிரியர் கூறும் போது ‘ தேசிய கீதம் இசைப்பதால் கிராம மக்களிடமும், மாணவர்களிடமும் தேசப்பற்றினை உருவாக்க முடிகிறது என்றும், சில பெற்றோர்கள் குழந்தைகளை விட்டுச் செல்ல வரும்போது தேசிய கீதம் இசைக்கும் வரை காத்திருந்து தங்கள் பிள்ளைகளோடு தேசிய கீதத்தை பாடிச் செல்கின்றனர் என்றார்.

பள்ளி கட்டிடத்தில் மேலே 100 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்பீக்கரால் , தேசிய கீதம் இசைப்பது அனைவருக்கும் கேட்கிறது. மக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர் என்கிறார் அந்த ஊர்த் தலைவர். அதோடு ஊர் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட பள்ளியின் இந்த திட்டம் உதவுவதாகவும் அவர் தெரிவித்தார். அதே பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யும் நர்சினா கூறும் போது, சமைத்துக் கொண்டிருக்கும் போது தேசிய கீதம் இசைப்பதை கேட்டால், அப்படியே வைத்து விட்டு எழுந்து நின்று நானும் பாடுவேன். மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையும் அது தனக்குள் ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com