இந்தியாவில் வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் பெண்களிடையே புகைப்பழக்கம் அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ASSOCHAM ன் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை, அகமதாபாத், பெங்களுரு, சென்னை, டெல்லி,ஹைதராபாத், உள்ளிட்ட 10 நகரங்களில் 2 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தியது. 22 முதல் 33 வயதுக்குட்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 40 சதவிகித பெண்கள் புகைப்பழக்கம் உள்ளவர்களாகவும், 2 சதவிகிதம் பேர் புகைக்கு அடிமையானவர்களாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. 12 சதவிகித பெண்கள் நாளொன்றுக்கு 2 அல்லது 3 சிகரெட் பிடிப்பவர்கள் என்று ஆய்வு கூறுகிறது. மன அழுத்தம், வேலைப்பளு போன்றவற்றால் புகைப்பழக்கத்தை மேற்கொண்டதாக கூறியுள்ளனர்
பெண்களின் புகைப்பழக்கம் கருவில் இருக்கும் சிசுவையும் சிதைக்கும் பலம் கொண்டது என்று கூறும் மருத்துவர்கள், உயிரணு குறைப்பாடு, கருச்சிதைவு என இளம் தம்பதியினரின் பிள்ளைக் கனவை கலைக்கும் நாகரீக அரக்கனாகிவிட்டது என்கிறார்கள். மனநல மருத்துவரிடம் முறையான ஆலோசனை, உடற்கட்டுப்பாடு, நல்ல நண்பர்கள் என வாழும் முறையை மாற்றியே ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
Loading More post
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!