Published : 17,Mar 2018 07:48 AM

திமுக ராஜினாமா அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்: திருமாவளவன்

DMK--resigns-Gives-Pressure-to-AIADMK---Thirumavalvan

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால் அது அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "காவிரி மேலாண்மை வாரியம் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு வேண்டுமென்ற காலம் தாழ்த்தி வருகிறது. காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். இதை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்த முன் வந்துள்ளார். அதிமுக முன்வந்தால் ராஜினாமா செய்ய தயார் என கூறி உள்ளார்.திமுக ராஜினாமா செய்தால் அதிமுகவுக்கு அது நெருக்கடி ஏற்படுத்தும். இந்திய அரசியல் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானம் திருப்பு முனையை ஏற்படுத்தும். நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக அதிமுக செயல்பட வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தனது தலைமையில் 24ஆம் தேதி தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

ஜனநாய ரீதியாக கருத்து தெரிவித்த கே.சி.பழனிச்சாமி கட்சியில் இருந்து நீக்கியது வேதனை அளிக்கிறது. இப்படி நடவடிக்கை எடுப்பவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எப்படி ஆதரவாக இருப்பார்கள் எனக் கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்