
நடந்து சென்றவரை கடுமையாக தாக்கி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சியை சேர்ந்தவர் விஜய். சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள கேண்டீனில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்றிரவு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் நடந்து சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் அவர் அருகில் வந்த மர்ம நபர்கள் சிலர், விஜயை பிடித்து வைத்து பீர் பாட்டிலால் குத்தியிருக்கின்றனர். பின்னர் அவரது பையில் இருந்து ரூபாய் 8,000 பணத்தையும் வழிப்பறி செய்த அவர்கள், அங்கிருந்து தப்பியிருக்கின்றனர். ரத்த வெள்ளத்தில் விஜய் சரிந்திருக்கிறார்.
பின்னர் தகவல் அறிந்த பெரியமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு படுகாயத்துடன் இருந்த விஜயை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் பெரியமேடு போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.