[X] Close

மாணவியை பாலியல் தொந்தரவு செய்த தாளாளர் கைது

collage-student-sexual-harassment

சாத்தூரில் தனியார் நர்சிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவியை பாலியல் தொந்தரவு செய்த கல்லூரி தாளாளர் உட்பட 3பேர் கைது .


Advertisement

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பண்டுதன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். அவருடைய மகள் சுமதி (பெயர்மாற்றப்பட்டுள்ளது). சுமதி சாத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 11ம் தேதி சுமதியை காணவில்லை என சுமதியின் தயார் பெருமாள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.


Advertisement

இந்நிலையில் சுமதியை இன்று சாத்தூரில் உள்ள பேருந்து நிலையத்தில் போலீசார் கண்டுப்பிடித்து உள்ளனர். சுமதியை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சாத்தூர் பேருந்து நிலையத்தில் பூக்கடை நடத்தி வந்த பாண்டி மற்றும் வன்னிமடையை சேர்ந்த மாரிமுத்து ஆகிய இருவரும் தன்னை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும் மற்றும் தான் படிக்கும் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் சையது இப்ராஹீம்  தன்னை தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்தார் எனவும் வாக்குமூலம் அளித்தார்.

அதனை தொடர்ந்து இன்று சாத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கல்லூரி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த மூன்று பேரையும் கைது செய்தனர். சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மூன்று பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அந்த மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close