காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலண்மை வாரியம் தொடர்பாக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் மாலை 3.30 மணியளவில் தொடங்கியது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வலியுறுத்தி முதலமைச்சர் பழனிச்சாமி தீர்மானத்தை முன்மொழிந்தார்.
பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், “மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் உள்நோக்கத்தை தனக்கு சாதகமாக மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறது. தமிழக எம்.பி.க்களை பிரதமர் சந்திக்காதது ஜனநாயகத்திற்கு நெருக்கடியான தருணம். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாகும். நீட் உள்ளிட்ட விவகாரங்களில் பேரவையின் தீர்மானத்தை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய தயார்” என்று கூறினார்.
இதனையடுத்து, காவிரி மேலாண்மை தொடர்பான தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றபம் செய்யப்படவுள்ளது.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்