பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வீடு அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 5 போலீசார் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவரது பங்களா லாகூரில் உள்ளது. இந்தப் பகுதிக்கு 2 கிலோமீட்டர் தூரத்தில் செக் போஸ்ட் உள்ளது. இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்தப் பகுதிக்கு நேற்று வந்த டீன் ஏஜ் வயதுடைய தீவிரவாதி ஒருவன், தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை திடீரென்று வெடிக்க செய்தான். இதில் 5 போலீசார் உட்பா 9 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் 15 போலீசார் உட்பட 25 பேர் காயமடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தற்போது துபாயில் நடந்து வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்டின் அரை இறுதி போட்டிகள் லாகூர் நகரில் நடைபெற உள்ள நிலையில் இத் தாக்குதல் நடந்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!