[X] Close

ஆடு திருடனை குண்டர் சட்டத்தில் அடைத்த போலீஸ்!

Theni-Sheep-Thief-arrested-by-Goondas-act

தேனி ஆடு மற்றும் செல்போன் கடையை உடைத்து திருடியவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் குள்ளப்பகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் தொடர்ந்து பல இடங்களில், பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக இந்த திருடன் மீது பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. போலீஸார் அடிக்கடி நடவடிக்கை எடுத்தும் திருடும் குற்றத்தை சந்திரன் விடுவதாக தெரியவில்லை. இதற்கிடைய சந்திரன் குற்றச்செயல்கள் தொடர்பாக நாளுக்கு நாள் புகார்கள் அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளன.

இதனால் திருடனின் அட்டூழியத்தை ஒடுக்க நினைத்த போலீஸ், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சந்திரன், இதுவரை பல்வேறு பகுதிகளில் 59 ஆடுகளை திருடியுள்ளார். அத்துடன் செல்போன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளார். இதன் காரணமாகவே, இவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close