Published : 14,Mar 2018 02:27 PM
ஜெயலலிதா ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொண்டார்: மருத்துவர் வாக்குமூலம்

மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே ஜெயலலிதா ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டுவந்ததாக, அவரது மருத்துவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் இன்று ஆஜராகிய சிவக்குமாரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதில், சரும பிரச்னை காரணமாக ஜெயலலிதா 2 வார காலத்திற்கு ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டதாகவும், ஆனால் அதனால் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்படவில்லை என்றும் சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார். 2 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்த நிலையில், திடீரென ஜெயலலிதா வீட்டில் மயங்கி விழுந்ததாகவும், முதலுதவிக்கு பின் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது தானும் உடனிருந்ததாக சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் தெரிவித்தார். செப்டம்பர் 26ஆம் தேதி வரை அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த கேள்விகளுக்கு சிவக்குமார் பதிலளித்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை தொடரும் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.