[X] Close

ஸ்டாலினின் கள ஆய்வும் கண்டுபிடிப்பும்

Stalin-s-field-analysis-and-discovery

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடந்த 26 நாட்கள் நடத்திய கள ஆய்வு கூட்டத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

திமுக கள ஆய்வுக் கூட்டம் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்நிலையில் நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால் 15ம் தேதியிலிருந்து 22ம் தேதி வரையிலான கள ஆய்வுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 14ம் தேதி வரை 26நாட்கள், இதுவரை 53 மாவட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் கள ஆய்வு நடத்தியுள்ளார். குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து பஞ்சாயத்து செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரையும்,  துணை அணிகளின்  அமைப்பாளர்கள் என ஒரு மாவட்டத்தில் இருந்து குறைந்த பட்சம் 120 பேர் முதல் 150 பேர் வரை தினமும்  ஸ்டாலின் சந்தித்து நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டறிந்துள்ளார்.


Advertisement

தினமும் காலை 8 மணியிருந்து 12மணி வரையிலும், மாலை 3 மணியிலிருந்து 5.30 மணி வரையிலும் 26 நாட்களில் 163 மணி நேரத்தில் 
53 மாவட்டங்களில் இருந்து 7,800  நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரிடையாக கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.கள ஆய்வில்  ஸ்டாலின்  பொதுவாக பேசும் போது, 

*மாவட்ட, ஒன்றிய செயலாளர்கள் சரிவர கூட்டம் நடத்ததாத காரணத்தினால் தான் தான் கள ஆய்வு நடத்துகிறேன்.

*செயல்படாத மாவட்ட  செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்


Advertisement

* கள ஆய்வின் மூலம் பெரும்பாலானோர் இரண்டு பதவியில் இருப்பது கண்டுபிடிப்பு. ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் 

* பெரும்பாலான மாவட்டங்களில் கோஷ்டி பூசல் இருப்பது உண்மை அதனை விரைவில் கலையப்படும்

 * மக்களிடத்தில் என்னை ஜனநாயகவாதியாகவும், கட்சியில் என்னை சர்வாதிகாரியாகவும் செயல்பட அனுமதியுங்கள் என்று பேசியுள்ளார்.

கள ஆய்வில் தீர்வு காணும் பெட்டி ஒன்று  வைக்கப்பட்டு இருந்தது.  இந்தப் பெட்டியில் தினமும் கூட்டத்திற்கு வரும் 80% பேர் தங்களது மாவட்ட செயலாளர்கள் மீது புகார் மனு போட்டுள்ளளனர்.சேலம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் மீது மட்டும் புகார் மனு குறைவாக வந்துள்ளது. இந்த புகார் மனு மீதான விசாரணையை தீர்க்க வக்கீல் என்.ஆர்.இளங்கோ தலைமையில் 16 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி பிரச்னைக்கு தீர்வு கண்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close