[X] Close

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

weather-report

தமிழக,புதுச்சேரி மற்றும் கேரள மீனவர்கள்  கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகரும், எனவே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக குறைந்து மத்திய கிழக்கு அரபிக் கடலில் வலுவிழக்க கூடும். இதன் காரணமாக வடதமிழக உள் மாவட்டங்களிலும் மற்றும் தென் தமிழகம் முழுவதும் மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது.  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவே தென் மாவட்டங்களில் நேற்று அதிக அளவில் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெறிவித்துள்ளார். 

இந்நிலையில் வரும் 16ஆம் தேதி வரை மீனவர்கள் குமரிக் கடல், புதுச்சேரி மற்றும் கேரள கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். இதன் காரணமாக இன்று புதுச்சேரியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்  கடலுக்குச் செல்லவில்லை. 700-க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுகள்  துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடலோரத்தில் வசிக்கும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close