டூவீலருக்கு வித் அவுட் யூனிஃபார்ம் பைன்: போலீஸ் அட்ராசிட்டி

டூவீலருக்கு வித் அவுட் யூனிஃபார்ம் பைன்: போலீஸ் அட்ராசிட்டி
டூவீலருக்கு வித் அவுட் யூனிஃபார்ம் பைன்: போலீஸ் அட்ராசிட்டி

வேலூரில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர் யூனிஃபார்ம் அணியவில்லை என்று கூறி போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

வேலூரை சேர்ந்தவர் ரகுநாதன். இவர் வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்கள் இவரை மறித்துள்ளனர். இவரிடம் லைசென்ஸ் போன்றவை இருக்கிறதா என சரிபார்த்த காவல்துறையினர் போக்குவரத்து சிக்னலை மீறி வந்ததாகக் கூறி ரூபாய் 200 அபராதம் விதித்துள்ளனர்.அதற்கான ரசீதையும் காவலர்கள் வழங்கியுள்ளனர். அதில் குற்றம் என்ற இடத்தில் வித் அவுட் யூனிஃபார்ம், போக்குவரத்து சிக்னலை மதிக்கவில்லை என எழுதியுள்ளனர்.

பொதுவாக கனரக, சரக்கு வாகனங்களை  இயக்குபவர்கள் தான் ஓட்டுநருக்கான உடை அணிந்து வாகனம் இயக்க வேண்டும் என விதியுள்ளது. டுவீலருக்கும் யூனிஃபார்ம் போட்டுதான் ஒட்டனுமோ, நமக்கு தான் விதி தெரியவில்லையோ என்னமோ போங்க.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com