Published : 12,Mar 2018 09:31 AM

சிறைக்குள் செல்பி - ஃபேஸ்புக்கில் படத்தை பதிவிட்டு சிக்கிய கைதிகள்

UP--3-Prisoners-click-selfie--upload-it-on-facebook

சிறைக்குள் செல்பி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் கைதிகள் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்திரபிரதேசத்தில், கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக விஜய் சௌத்ரி என்பவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு முசாபர்நகர் சிறையில்,  அடைக்கப்பட்டார். இவர் ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகி தன்னுடன் சிறையில் உள்ள இரண்டு நபர்களுடன் சிறைக்குள்ளே செல்பி எடுத்து, அந்த படங்களை தனது ஃபேஸ்புக் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை கண்டறிந்த சிறை நிர்வாகம் அவர்கள் உபயோகப்படுத்திய கைபேசியை கைப்பற்றிவுள்ளனர். கைதி விஜய் சௌத்ரி அதிகாரிகளிடம் சிக்க முக்கிய காரணம் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்ட புகைப்படம் பரவியதே காரணம். அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பே கடந்த மாதம் இதேபோல் இரண்டு புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார். ஆனால் அப்போது சிறை அதிகாரிகள் கவனிக்கவில்லை.

இதுகுறித்து சிறை அதிகாரி கூறுகையில், “இவர்களுக்கு கைபேசிகளை கொடுப்பது யாரென்று தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறையில் செல்போன் பயன்படுத்தப்படுவதை தடுக்க சிறைக்குள், ஜாமர் கருவி பொறுத்தவுள்ளோம்” என்று கூறினார். சிறையில் கைபேசிகள் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும் என்ற போதும், அனைத்து சிறைகளில் மறைமுகமாக கைபேசியை கைதிகள் உபயோகிக்கிறார்கள் என்ற புகார் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்