[X] Close

'முடிந்தது முடிந்துவிட்டது, இனி பேச்சில்லை’: ஷமி மனைவி!

Mohammed-Shami---s-wife-rules-out-any-compromise

’’இனி ஷமியுடன் வாழப்போவதில்லை’’ என உறுதியாகச் சொல்லிவிட்டார், கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி. 


Advertisement

சின்ன சின்ன குடும்ப சண்டைகள் இப்படி விஸ்வரூபம் எடுக்கும் என்று ஷமி கண்டிப்பாக நினைத்திருக்க மாட்டார். பொதுவாக புகழ் பெற்றுவிட்டாலே, போதையும் வந்துவிடும். இந்தப் புகழ்ப் போதை சினிமாவில் அதிகம். அது கிரிக்கெட்டிலும் இருப்பது வியப்பேதும் இல்லை. ஏனென்றால், அது அப்படித்தான்!


 
ஹசின் யார்?


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் அவர் மனைவி ஹசின் ஜஹானும் காதலித்து திருமணம் செய்தவர்கள்.  ஹசின், சிறு வயதிலேயே மாடலிங் துறையில் ஈடுபட்டவர். சினிமாதான் அவர் கனவு. ஹீரோயினாக நினைத்திருந்தார். இதற்கிடையில் முதல் திருமணம் முறிந்துபோக, சினிமா கனவும் நிறைவேறவில்லை. 2012-ல் நடந்த ஐபிஎல் போட்டியின் போதுதான் ஷமியை சந்தித்திருக்கிறார் ஹசின். கண்டதும் காதல். இரண்டு வருட டேட்டிங். பிறகு 2014-ல் திருமணம் செய்துகொண்டனர். 

நன்றாகப் போய்க் கொண்டிருந்த காதல் வாழ்க்கையில் பல பெண்களின் வழி புகுந்தது சிக்கல். ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு போட்டிகளுக்காக செல்லும்போது பல பெண்களுடன் ஷமி ஜாலியாக சுற்றுவதாகவும் புகார் கூறினார் ஹசின் ஜஹான். அதோடு மட்டுமில்லாமல் ஷமி குடும்பத்தினர் தன்னை அதிகமாக கொடுமைப் படுத்துவதாகவும், தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் மனைவியின் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக மறுத்து வந்த ஷமி, ‘அனைத்தும் பொய். இதை முறையாக விசாரிக்க வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பேன்’ என்றார். 


Advertisement

இதனிடையே, கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் போலீஸ் நிலையத்தில் ஹசின் ஜஹான் அளித்த புகாரின் அடிப்படையில், முகமது ஷமி மீது, கொலை முயற்சி, குடும்ப வன்முறை, வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அவரது பெயரை ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. ஐபில்-லில் டெல்லி அணிக்காக அவர் விளையாடுவதும் சந்தேகம் என்கின்றனர். இதனால் ஷாக் ஆகியுள்ளார் ஷமி.

பிறகு பேசிய ஷமி, “இந்தப் பிரச்னையை பேசித்தான் தீர்க்க முடியும். அதைவிட சிறந்த வழி இல்லை. நாங்கள் மீண்டும் சேர்வது எங்கள் மகளுக்கு நல்லது. இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்காக கொல்கத்தா செல்ல தயாராக இருக்கிறேன். ஹசின் ஜஹான் எப்போது பேச நினைக்கிறாரோ, அப்போது பேசத் தயார்” என்றார்.

இந்நிலையில் ஷமியின் உறவினர்கள், அவர் மனைவி ஹசின் ஜஹானின் வழக்கறிஞர் ஜாகிர் ஹுசைனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளனர். குடும்ப விவகாரம் நாடு முழுவதும் சிக்கிச் சின்னாபின்னமாவதால், இந்தப் பிரச்னையை கோர்ட்டுக்கு வெளியே பேசித் தீர்த்துக்கொள்வோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். ‘’இரண்டு குடும்பத்தின் பெரியவர்களும் இதில் பேசி வருகின்றனர். இந்த விவகாரத்தை மேலும் வளர்க்காமல் பிரச்னையை முடிக்க அவர்கள் உறுதியாக உள்ளனர்’’ என்கின்றனர் வழக்கறிஞர் தரப்பில். 

இதை ஹசினும் உறுதிப்படுத்தினார். ’‘அவர்கள் எனது வழக்கறிஞரிடம் பேசியிருப்பது உண்மைதான். ஆனால் என்னிடம் யாரும் பேசவில்லை’’ என்ற ஹசின், ஷமியுடன் இனி சமரசத்துக்கு வழியில்லை என்று தெரிவித்திருக்கிறார். 

” முடிந்தது முடிந்துவிட்டது. கடந்த நான்கு வருடங்களாக அவரது தவறுகளை மன்னித்துக்கொண்டே இருந்தேன். நல்வழிக்கு திரும்புவார் என்று எதிர்பார்த்தேன். என் குழந்தைக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன். இனி முடியாது. எல்லாம் முடிந்துவிட்டது. ஷமியுடன் சமரசம் என்ற பேச்சுக்கே வழியில்லை’ என்கிறார் ஆவேசமாக.

எல்லா பிரச்னைகளும் பேச்சுவார்த்தை மூலமே நல்ல முடிவுக்கு வந்திருக்கிறது. இவர்கள் பிரச்னையில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்!


Advertisement

Advertisement
[X] Close