ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரத போராட்டம்

ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரத போராட்டம்

ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரத போராட்டம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி ஓபிஎஸ் அணியினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 36 இடங்களில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரோடு, மதுசூதனன், பொன்னையன், பிஎச் பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இதேபோல், ஆவடியில் முன்னாள் அமைச்சர் மா.பாண்டியராஜன் தலைமையில் நீதிவிசாரணை கோரி, போராட்டம் நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டில், மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் பங்கேற்றுள்ளார். இதேபோல், கோவையில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆறுக்குட்டி, சின்னராஜ், அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com