Published : 11,Mar 2018 03:42 PM

காட்டுத்தீக்கு மர்ம நபர்களே காரணம்: முதலமைச்சர் பழனிசாமி!

CM-Palanisamy-said-about-Theni-Fire-Accidents

காட்டுத்தீ ஏற்பட சில மர்ம நபர்களே காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம்
முதலமைச்சர் பழனிசாமி, “காட்டுத்தீ ஏற்பட்டுள்ள இடத்திற்கு வனத்துறை அமைச்சர் செல்லுமாறு கூறினேன். தற்போது தான் தகவல்
கிடைத்தது. நான் தகவல் கூறுவதற்கு முன்பே வனத்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். வனத்துறை அமைச்சர் சென்று,
எத்தனை மீட்கப்பட்டுள்ளனர், மீட்கப்பட்டவர்களின் நிலை என்ன, காட்டுத்தீயில் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து
ஆய்வு செய்கிறார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் பேசப்பட்டு, ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டுள்ளது. 

வனப்பகுதி என்பது மிகப்பெரிய நிலப்பரப்பு. வனத்துறை அதிகாரிகளை தவிர வேறு யாரும் அங்கு செல்லமுடியாது. இந்த தீவிபத்து
எப்படி ஏற்பட்டது என இன்னும் தெரியவில்லை. வனப்பகுதியில் யார் செல்கிறார் என்பதை எளிதில் கண்டறிய முடியாது. மர்ம நபர்கள்
சிலரால் இதுபோன்ற காட்டுத்தீ ஏற்படுகிறது. வருங்காலத்தில் வனத்துறையில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்” என்று கூறினார்.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்