Published : 11,Mar 2018 02:59 PM
தேனி காட்டுத்தீ: சிறுவர்களும் மீட்பு!

தேனியில் காட்டுத்தீயில் இருந்து சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 40 பேர் சிக்கினர். இரண்டு குழுக்களாக மலையேற சென்ற இவர்கள், திங்கட்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் 13 பேர் திருப்பூரில் இருந்து சென்றவர்கள் என்றும், 27 பேர் சென்னையில் இருந்து சென்றவர்கள் என்றும் அறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்கப்பட்டவர்களில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தீருப்புரை சேர்ந்த ராஜசேகர், பாவனா, சாதனா, ஈரோட்டை சேர்ந்த நேகா, சென்னையை சேர்ந்த மோனிஷா, பூஜா, சகானா ஆகியோர் ஆவர்.
இன்னும் 10 பேர் தீயில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர்களை மீட்பதற்கு தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர், போலீஸார், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் கிராம மக்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். முதலமைச்சர் பழனிசாமியும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீட்புப் பணிகளை முடுக்கிவிட விமானப்படைக்கு உத்தரவிட்டுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். சென்றவர்கள் மாணவர்கள் என்று கூறப்பட்ட நிலையில், சிறுவர்கள் மீட்கப்பட்டிருப்பது வனத்துறை அனுமதி தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.