Published : 11,Mar 2018 10:05 AM

‘சரக்கு’ டார்ச்சரில் உயிரை விட துணிந்த தொழிலாளி..!

Friends-torture--Labour-Protest-near-cuddalore

கடலூர் மாவட்டத்தில் நண்பர்கள் மதுவாங்கி தர கூறி தொந்தரவு செய்வதாகக், கூலித் தொழிலாளி ஒருவர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போரட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் அயன்குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளியான இவர் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு சில நண்பர்கள் உண்டு. அவர்கள் அடிக்கடி குமாரிடம் ‘சரக்கு வாங்கித் தா’ என கேட்டு வந்திருக்கின்றனர். ஒரு நாள் இருநாள் அல்ல பல நாட்களாக குமாரிடம் நண்பர்கள் மது வாங்கித் தருமாறு கோரிக்கை வைத்திருக்கின்றனர். இதனால் குமாருக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. நண்பர்களையும் குமாரால் சமாளிக்க முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாத குமார், தனது உயிரையும் பொருட்படுத்தாது செல்போன் கோபுரத்தின் மீது ஏறிவிட்டார்.

பண்டிருட்டியில் கும்பகோணம் சாலையில் உள்ள 60 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். அத்தோடு மட்டுமில்லாமல் பெட்ரோல் கேனையும் தனது கையில் வைத்திருந்தார். இதனையறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி குமாரை போராட்டத்தை கைவிடச் செய்தனர். பின்னர், நண்பர்கள் மதுவாங்கி தரக்கூறி தொந்தரவு செய்வதால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்