Published : 08,Mar 2017 02:44 AM
நீட் தேர்வு விவகாரம்: டெல்லி சென்றனர் தமிழக அமைச்சர்கள்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் டெல்லி சென்றனர்.
இவர்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜவடேகர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவையும் சந்திக்க உள்ளனர். டெல்லி புறப்படுவதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் சாதகமான முடிவை தருவர் என நம்பிக்கை தெரிவித்தார்.