சானிடரி நாப்கின் கொடுக்கும் இயந்திரம்

சானிடரி நாப்கின் கொடுக்கும் இயந்திரம்
சானிடரி நாப்கின் கொடுக்கும் இயந்திரம்

ஆந்திரம் - தெலுங்கானா மாநில தலைநகரமான ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் சானிடரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. 


விமானத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் பெண்களுக்கு பயனளிக்கும் விதமாக, விமான நிலையத்தில் மொத்தம் 26 கழிவறைகளில் தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் 5 ரூபாய் நாணயத்தை செலுத்தினால் சானிடரி நாப்கின் கிடைக்கும். 


இதற்க்கு பெண் பயணிகள் மற்றும் விமான நிலையத்தில் பணி புரியும் பெண்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். இது மிகவும் பயனுள்ள நல்ல திட்டம் என பெண்கள் கூறியுள்ளனர். மேலும் நீண்ட தூரப் பயணங்களின் போது அவசரத்தில் முக்கியமான சானிட்டரி நாப்கின் எடுத்துச் செல்ல மறந்துவிடுகின்றனர். எனவே, விமானப் போக்குவரத்தை பயன்படுத்தும் பெரும்பாலான பெண்களுக்கு இத்திட்டம் பயன்படும் என பலரும் தெரிவிக்கின்றனர். மேலும் இதேபோன்ற திட்டத்தை அனைத்து விமான நிலையங்களிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com