இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், பொதுமக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சி மடம், மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ, சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்றார். தனுஷ்கோடி, ஆதம்பாலம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 4 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 22 வயதான பிரிட்ஜோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின்போது பிரிட்ஜோவின் உடலில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது.
இதனையடுத்து, மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முதலமைச்சர் பழனிசாமியும் மீனவர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால் வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் வரும் வரை பிரிட்ஜோவின் உடலை வாங்கப்போவதில்லை என கூறி உறவினர்களும், பொதுமக்களும் தீர்க்கமாக தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்