ஃபேனில் தூக்குப் போட்டு டி.வி. நடிகை தற்கொலை!

ஃபேனில் தூக்குப் போட்டு டி.வி. நடிகை தற்கொலை!
ஃபேனில் தூக்குப் போட்டு டி.வி. நடிகை தற்கொலை!

இளம் டிவி நடிகை, தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கூக்ளி மாவட்டத்தில் உள்ள பண்டேல் பகுதியைச் சேர்ந்தவர் மவுமிதா சஹா. வயது 23. தெற்கு கொல்கத்தாவில் தனியாக, ரீஜெண்ட் பார்க் பிளாட்டில் தங்கி டி.வி.சீரியல்களில் நடித்து வந்தார். அதிக வாய்ப்பு இல்லாததால் மன அழுத்தத்தில் இருந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது ஃபோனுக்கு பெற்றோர்கள் தொடர்பு கொண்டனர். எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், வீட்டின் உரிமையாளர்களுக்கு ஃபோன் செய்து விவரத்தைக் கூறினர். அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றனர். கதவு உட்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. 

கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அவர், ஃபேனில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்திருந்தது தெரிய வந்தது. துப்பட்டாவைக் கழுத்தில் கட்டி தூக்குப் போட்டுள்ளார். போலீசார் அவர் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது அறையில் தற்கொலைக்கான காரணம் பற்றி அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் இருந்த விவரங்களை போலீசார் உடனடியாக வெளியிடவில்லை. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com