காதலர்களை பிரித்த தாய்..? அஷ்வினிக்கு எமனான காதலன்..!

காதலர்களை பிரித்த தாய்..? அஷ்வினிக்கு எமனான காதலன்..!
காதலர்களை பிரித்த தாய்..? அஷ்வினிக்கு எமனான காதலன்..!

சென்னையில் கல்லூரி வளாகத்தில் மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கொலை செய்யப்பட்ட அஷ்வினியும் கொலை செய்த அழகேசனும் 3 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்தது தெரியவந்துள்ளது.

சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பி.காம். படித்து வரும் மாணவி அஷ்வினி. மாணவி இன்றைய வகுப்புகள் முடிந்து வீடு திரும்ப கல்லூரி வாசலுக்கு வந்தபோது அஷ்வினியை இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவியை பொதுமக்கள் மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அஷ்வினியின் கழுத்தை அறுத்து கொலை செய்து அழகேசன் ஏற்கனவே பலமுறை அஷ்வினிக்கு காதல் தொல்லை கொடுத்ததாகவும், ஆனால் அழகேசனின் காதலை அஷ்வினி ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை கொடூரமாக கொலை செய்ததாகவும் முதலில் கூறப்பட்ட நிலையில், அஷ்வினியும் கொலை செய்த அழகேசனும் 3 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அஸ்வினியின் படிப்பு செலவிற்காக ஏற்கனவே அழகேசன் ரூபாய் 2.5 லட்சம் வரை பண உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.

அஷ்வினிக்கும் அழகேசனுக்கும் இருந்த தொடர்பு குறித்து அழகேசனின் சகோதரி பரிபூரணம் கூறும்போது, “அஷ்வினியும் அழகேசனும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அஷ்வினியின் படிப்பு செலவிற்காக அழகேசன் 2.5 லட்சம் வரை பண உதவி செய்துள்ளார். இருவர் வீட்டிலும் முதலில் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டோம். ஆனால் திடீரென அஷ்வினியின் தாய் சங்கரி, திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் மனமுடைந்த அழகேசன் கடந்த இரண்டு மதத்திற்கு முன்பு குட்நைட் அருந்தி தற்கொலை முயன்றார். அனைவரும் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தால் அந்த நேரத்தில் அழகேசன் உயிர் பிழைத்தார்.அதேபோல் கடந்த மாதம் பிப்ரவரி 14-ஆம் தேதி அஸ்வினி வீட்டிற்கு சென்று, அஷ்வினியின் அனுமதியுடன் அழகேசன் தாலி கட்டினார். ஆனால் காவல் நிலையம் சென்று பொய் புகார் அளித்து இருவரையும் பிரித்தனர். அழகேசனை திருமணம் செய்து கொண்டால் தற்கொலை செய்துவிடுவேன் என அஷ்வினியை அவரது தாய் சங்கரி பலமுறை மிரட்டியிருக்கிறார்”  எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com