Published : 09,Mar 2018 06:45 AM
தமிழராகவே மாறிய ஹர்பஜன்...!

இந்திய அணியின் சுழல் பந்துவீச்சளாராக இருந்தவர் ஹர்பஜன். சமீப நாட்களாக அணியில் இடம் கிடைக்கமால் தவித்து வரும் அவரை ஐபிஎல் மும்பை அணியும் கழற்றிவிட்டது. இதனையடுத்து இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஹர்பஜன் சிங்கை ஏலம் எடுத்தது. உடனே ’வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு ’ என பதிவிட்டு தன்னை சென்னை அணி எடுத்த சந்தோஷத்தை வெளிபடுத்தி இருந்தார்.
நேற்று உலகமுழுவதும் மார்ச் 8 உலக மகளிர் தினமாக கொண்டப்பட்டது . ஹர்பஜனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்தை தமிழில் ஒரு கவிதை போலவே பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியபடுத்தினார். அதில் ”அன்னையும் அவளே, சகோதரியும் அவளே, தோழியும் அவளே, மனைவியும் அவளே, மகளும் அவளே, உலகில் உள்ள அணைத்து உறவுகளின் அடிப்படையும் அவளே. பெண்ணாக பிறவி எடுத்த அனைவருக்கும் அன்பு சகோதரனின் மகளிர் தின நல்வாழ்த்துகள் பெண்மையை போற்றுவோம்.. ” என்று பதிவிட்டு சென்னை அணியில் தான் விளையாட இருக்கும் ஆவலை வெளிபடுத்தி உள்ளார்.