Published : 09,Mar 2018 02:50 AM

கிரிக்கெட்டர்கள் லீலை மன்னர்கள் தான்: ஷமி மனைவி கொடுத்த ஷாக்

Cricketer-was-constantly-having-sex-with-sex-workers

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி குறித்து அவரது மனைவி தொடர்ந்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

ஹசின் ஜஹானின் இரண்டாவது கணவர் தான் ஷமி. ஹசின் ஜஹானுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை விவாகரத்து செய்துள்ளார். அதன் பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சீயர் லீடராக இருந்துள்ளார், இந்நிலையில் ஷமிக்கும் ஜஹானுக்கும்  கடந்த 2012ல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பு ரீதியில் தொடங்கிய இவர்களது உறவு நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2014ல் திருமணம் செய்துகொண்டனர். 

இந்நிலையில் தான் தற்போது ஷமி மீது ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முகநூல் பதிவில் தொடங்கிய ஜஹானின் குற்றச்சாட்டுகள் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி காவல்நிலைய புகார் வரை சென்றுள்ளது. முதலில் முகநூலில் பதிவிட்ட ஜஹான், ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு உள்ளது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என சில புகைப்படங்களையும், குறுஞ்செய்தி உரையாடல்களையும் பதிவிட்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், ஷமியின் குடும்பத்தினர் என்னை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். தென்னாப்பிரிக்கா சென்று திரும்பிய ஷமி என்னை அடித்து துண்புறுத்துகிறார் என்றார். நான் எனது மகளுக்காக இத்தனை நாளாக அமைதியாக இருந்தேன் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.எனது இறுதி மூச்சு இருக்கும் வரை ஷமியை விட்டு பிரிய மாட்டேன் எனவும் அவர் கூறினார். 

நேற்று மீண்டும் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஷமிக்கு பாலிவுட் நடிகையை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று விருப்பம். அதற்காக தான் என்னை இப்படி துன்புறுத்துகிறார்.ஷமிக்காக நான் எனது வேலை, மாடலிங் துறை என எல்லாவற்றையும் விட்டு விட்டேன். அவருக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்தின் போது அந்தப் பெண்ணுடன் தான் அவர் சென்றார். ஷமி ஒரு இரட்டை வேட மனிதர் திருமணத்திற்கு முன் அவருக்கு பாகிஸ்தான் பெண்ணுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியாது. ஷமி எனக்கு எப்போதும் உண்மையாக இருந்தது இல்லை எனப் பொங்கினார்.

எனக்கு உண்மையாக இல்லாத ஷமி நாட்டுக்கும் உண்மையாக இல்லை.பாகிஸ்தானை சேர்ந்த அலிஷாப் என்ற பெண்ணிடம் பணம் வாங்கியுள்ளார். இங்கிலாந்தில் இருக்கும் முகமது பாயின் வலியுறுத்தலின் பேரில் அதைப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார்.அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றார்.

இப்படி பொங்கியெழுந்த ஜஹான் போகிற போக்கில், கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது பாலியல் தொழில் செய்யும் பெண்களுடனும் பிற பெண்களுடனும் உறவு வைத்துக்கொள்கின்றனர் என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்