[X] Close

காவிரி விவகாரம்: டெல்லியில் இன்று 4 மாநில ஆலோசனைக் கூட்டம்

Cauvery-issue--4-state-consultative-meetings-in-Delhi-today

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக 4 மாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இதில் தமிழகம் சார்பில் பங்கேற்க தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 6 வாரங்களுக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டது. இதில் 4 வாரங்கள் முடிந்தநிலையில், அடுத்த நடவடிக்கை பற்றி முடிவெடுக்க ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசு நடத்துகிறது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close