Published : 08,Mar 2018 05:06 PM

டி20 போட்டி: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

INDvsBAN-T20--India-won-by-6-wickets

வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

முத்தரப்பு தொடரின் இரண்டாவது டி20 போட்டி இன்று, இந்தியா-வங்கதேசம் இடையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. அந்த அணி லிடான் தாஸ் 34, சபீர் ரஹ்மான் 30 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இந்திய தரப்பில் ஜெயதேவ் உனாட்கட் 3, விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலக்கான 140 ரன்களை இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 18.4 ஓவர்களில் எட்டியது. இந்திய அணியில் சிக்கர் தவான் 55, சுரேஷ் ரெய்னா 28 மற்றும் மணிஷ் பாண்டே 27 ரன்கள் எடுத்தனர். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்