
பாகிஸ்தான் தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியான உணவுப் பொருள் சம்பந்தமான விளம்பரம் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. இந்த விளம்பரத்தை பேஸ்புக்கில் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
வேலைக்கு செல்லும் ஒரு பெண் எப்படி தன் குடும்பம், குழந்தையை கவனித்துக் கொள்கிறாள் என்று விளக்குவதோடு, தன் குழந்தைக்கும் தனக்கும் உள்ள அன்பை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளது.
மருத்துவராக இருக்கும் பெண்மணி, வேலை பளு காரணமாக தனது மகனிடம் பேச நேரமில்லாமல் தவக்கிறார்கள். தனது குடும்பத்தை வழிநடத்த ஒரு பெண் அவ்வாறு கஷ்டப்படுகிறாள் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது இந்த விளம்பரம். அந்தப் பெண்மணியின் பிள்ளை தனது அம்மாவிடம் ஏதோ பேச விரும்புவதாகவும். ஆனால் அலுவலகம் செல்லும் அவசரத்தால் அவர் பிள்ளையிடன் பேச நேரம் இல்லாததால். அந்தத் தாய் தனது மகனுக்கும் சொல்ல நினைப்பது எல்லாவற்றையும் சிறிய கடித்ததில் எழுதி லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்புகிறார். அந்தச் சிறுவனும் தினமும் மதிய நேரத்தில் அந்தக் கடிதத்தை எடுத்து படிக்கிறான். இப்படியே தொடரும் அவர்களின் உறவு, கடைசியில் அந்த சிறுவன் ஒரு சிறு குறிப்புடன் நம் உணர்வோடு, உணவை பகிர்வோம் என எழுதியுள்ளது, விளம்பரத்தை பார்க்கும் அனைவருக்கும் ஒரு ஈர்ப்பை கொடுக்கும் விதமாக அமைந்தது.