Published : 07,Mar 2017 09:56 AM

பெங்களூருவில் தொடரை சமன் செய்த இந்தியா

India-take-a-gripping-Bengaluru-Test-to-level-the-series-1-1

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நான்கு விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் 4ம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக புஜாரா, 92 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசல்வுட் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 188 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலிய அணி, 35.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 28 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்