Published : 07,Mar 2018 02:38 AM
இணையத்தை கலக்கும் நயன்தாராவின் போட்டோக்கள்

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் இணைந்து எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
‘நானும் ரௌடி தான்’ படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நடிகை நயன்தாராவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் சில நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்தே கலந்துகொண்டதால் இருவருக்கும் இடையே காதல் இருக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் தங்கள் காதல் தொடர்பான செய்தியை வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும் கூட, இதுதொடர்பாக வரும் செய்திகளுக்கு அவர்கள் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் மவுனம் காத்துதான் வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒரு புகைப்படத்தில் நயன்தாரா அன்புடன் விக்னேஷ் சிவன் தோளில் சாய்ந்தப்படி இருக்கிறார். அமெரிக்கா சென்றுள்ள அவர்கள் இருவரும் அங்குதான் இந்த புகைப்படத்தை எடுத்திருக்கின்றனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். கடந்த மாதம் அமெரிக்காவில் காதலர் தினத்தை கொண்டாடிய அவர்கள் அந்த சமயத்திலும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டனர்.