சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த 4ம் தேதி ஆயுதப்படை காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது உதவி ஆய்வாளரும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இரவு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். நள்ளிரவு 1.45 மணியளவில் எஸ்.ஐ சதீஷ் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று பேப்பரில் சதீஷ் எழுதி வைத்திருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதனிடையே காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியைக் கொண்டு இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அயனாவரம் காவல் நிலையத்தில் இரவுப் பணியிலிருந்த காவலர்களிடமும் அதிகாரிகளின் விசாரணை நடைபெற்று வருகிறது. 2011ஆம் ஆண்டு நேரடி எஸ்ஐயாக தேர்வு செய்யப்பட்ட சதீஷ் குமார், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஆவார். அயனாவரத்தில் ரவுடிகளை ஒழிப்பதில் திறமையாக செயல்பட்டவர் என்று பாராட்டு பெற்றவர் உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
உதய்பூர் கொலையாளிகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு - விசாரணையில் அம்பலம்
ஜவான் படத்தில் யாரை கொல்லப்போகிறார் அட்லீ? - புது அப்டேட்டால் நெட்டிசன்களிடையே சலசலப்பு!
ஒற்றைக்காலுடன் 2 கி.மீ-க்கு குதித்தபடியே தினமும் பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி மாணவி
இழந்து விடக்கூடாதது ஒன்றே ஒன்றுதான்! - #MorningMotivation #Inspiration
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix