Published : 06,Mar 2018 03:06 PM

ஜெயலலிதாவை அப்பல்லோவில் பார்த்தேன்: ஜெ. டிரைவர் வாக்குமூலம்!

Jayalalitha-Death-Inquiry-Commision--Jayalalitha-Driver-statement

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது பார்த்ததாக அவரின் டிரைவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகின்றது. இந்நிலையில் ஆணையத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கண்ணன் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பின், அவரை சந்தித்ததாக அவர் தெரிவித்தார். 

அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது ஆம்புலன்ஸை தான் பின் தொடர்ந்து சென்றதாகவும் கூறினார். அத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 நாட்களுக்கு பின், ஜெயலலிதாவை சந்திக்கச்சென்ற போது மருத்துவர்களுடன் அவர் பேசி கொண்டிருந்ததாகவும் கண்ணன் கூறியுள்ளார். 1991ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணியாற்றிவர் கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்