இனி ஐபோனிலும் சென்னை மாகராட்சியின் ஆஃப்..!

இனி ஐபோனிலும் சென்னை மாகராட்சியின் ஆஃப்..!
இனி ஐபோனிலும் சென்னை மாகராட்சியின் ஆஃப்..!

பொதுமக்கள் தங்களின் பிரச்னைகளை தெரிவிக்க மொபைல் ஆப் சென்னை மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டது. தற்போது இதனை ஐபோன் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நாய்கள் தொல்லை, குப்பை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பொதுமக்கள் தெரிவிக்க சென்னை மாநகராட்சி சார்பில் மொபைல் ஆஃப் (Namma Chennai App) தொடங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த ஜனவரி மாதம் இதனை திறந்து வைத்தார். ஆண்ட்ராய்டு செல்போன்கள் மூலம் மட்டுமே இந்த செயலியை இதுவரை பதிவிறக்கம் செய்த முடிந்த நிலையில் தற்போது ஐபோன்கள் மூலமும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு செல்போன்கள் மூலம் இந்த செயலியை இதுவரை 4221 பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், 1191 புகார்கள் பெறப்பட்டு அதில் 1138 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com