
சென்னை திரிசூலம் அருகே சாக்லேட் கொடுத்து 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது 5 வயது மகள் குருதர்ஷினி. வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் குழந்தையிடம் சாக்லேட் கொடுத்து ஆசைக்காட்டி திருமுருகன் என்ற இளைஞர் அவரது வீட்டிற்கு குழந்தையை அழைத்து சென்றிருக்கிறார். குழந்தையும் சாக்லேட்டிற்கு ஆசைப்பட்டு அவருடன் சென்றுள்ளது. திருமுருகனுக்கு வயது 28. அப்பகுதியில் கால் டாக்சி டிரைவராக பணியாற்றி வருகிறார். வீட்டில் குழந்தையிடம் சாக்லேட் கொடுத்தபின், குழந்தையை பாலியல் ரீதியாக திருமுருகன் சீண்டியிருக்கிறார். பின் 5 வயது குழந்தை என்றும் பாராமல் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யவும் திருமுருகன் முயன்றிருக்கிறார். இதனையடுத்து குழந்தை சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்திருக்கின்றனர்.
இதனையடுத்து சுதாகரித்துக் கொண்ட திருமுருகன் தப்பி ஓடி முயன்றிருக்கிறார். ஆனால் பொதுமக்கள் திருமுருகனை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தற்போது தாம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் திருமுருகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.