
அமெரிக்காவின் புகழ்பெற்ற நாவலாசிரியர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், இவரது 91வது ஆண்டு பிறந்தநாளை கூகுள் பிரத்யேக டூடுல் மூலம் கொண்டாடுகிறது. இவர் சிறந்த எழுத்தாளருக்கான நோபல் பரிசு பெற்றவர். பத்திரிக்கையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் "One Hundred Years of Solitude" என்ற நாவலை எழுதி உலகப்புகழ் பெற்றவர். அதற்காக நோபல் பரிசையும் பெற்றுள்ளார்.
மேஜிகல் ரியலிசம் என்ற கதை கூறும் முறையின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்பவர். 1983ஆம் ஆண்டு Journal of Arts and Ideas என்ற பத்திரிகை மார்க்வெஸ் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. தமிழிலும் எழுத்தாளர் கோணங்கி நடத்தி வரும் கல்குதிரை சிற்றிதழ், மார்க்வெஸ் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. 1927ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி கொலம்பியாவில் பிறந்த மார்க்வெஸ் எழுதிய நூல்கள் இன்றும் உலக அளவில் போற்றப்படும் படைப்புகளாக நிலைத்துள்ளன. இன்று இவரது 91வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் தனது இணையதளத்தின் முதல் பக்கத்தில் மார்க்வெஸ்ஸுக்கு மரியாதை செலுத்தும் முகமாக டூடுல் ஒன்றை வைத்துள்ளது.