[X] Close

துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை: இலங்கை மறுப்பு

Sri-Lankan-navy-denies-shooting-Indian-Fishermen

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்றும் அதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை என்றும் இலங்கை கடற்படை ஊடக தொடர்பாளர் சமிந்த வலாகுளகே தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்சோ (21) உயிரிழந்தார். மற்றொரு மீனவரான சாரோன் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இந்நிலையில், இலங்கை கடற்படையில் செய்தி தொடர்பாளர் கேப்டன் சமிந்த வலாகுளகே, இத்துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மறுத்துள்ளார். புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக தொலைபேசி வழியாக பேட்டியளித்த அவர், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு கடற்படைத் தளபதியின் அனுமதி தேவை என்றும் அதற்கான சந்தர்ப்பம் எழவில்லை என்றும் கூறினார். எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்வதற்கு மட்டுமே தங்களுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Advertisement

சிறிய படகுகள் மூலம் வந்தே துப்பாக்கிச் சூடு நடைபெற்றிருக்க வேண்டும் என்று கருதுவதாகவும், இலங்கை கடல் எல்லையின் பாதுகாப்புப் பணியில், கடற்படை தரப்பில் சிறிய படகுகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கச்சத்தீவில் மட்டுமே திருவிழா பாதுகாப்புப் பணிக்காக கடற்படைப் படகுகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறிய அவர், துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்ததும் இலங்கை கடற்படை தரப்‌பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், தங்கள் தரப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்பது உறுதியானதாகவும் சமிந்த வலாகுளகே தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close