நாகை மாவட்டம் தலைஞாயிறு திமுக ஒன்றிய செயலாளரைக் கூலிப்படையை வைத்து தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த கொத்தங்குடியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் கொத்தங்குடி திமுக ஊராட்சி செயலாளராக உள்ளார். மேலும் பூவைத்தேடி டாஸ்மாக் கடை விற்பனையாளராகப் பணிபுரிகிறார்.இந்நிலையில் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீடு திரும்பியபோது மர்ம நபர்கள் நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து பூவைத்தேடி என்ற இடத்தில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு வசந்தகுமாரை தாக்கியுள்ளனர். இதில்படுகாயமடைந்த வசந்தகுமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட வசந்தகுமார் கூறுகையில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்ட நேர்காணலில் பங்கேற்றேன். அப்போது மாவட்ட ஒன்றிய நிர்வாகம் சரியில்லை என ஸ்டாலின் முன்பாக கூறினேன். இதனால் ஆத்திரமடைந்த தலைஞாயிறு திமுக ஒன்றிய செயலாளர் மகாகுமார் என்னை அடியாட்களை கொண்டு தாக்கியுள்ளார் எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து கீழையூர் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!