மதுரையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடிகளில் ஒருவரான சகுனி கார்த்திக், காவல்துறை அதிகாரியை தொலைபேசி வாயிலாக மிரட்டிய வாட்ஸ்அப் ஆடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.
மதுரை சிக்கந்தர்சாவடி பகுதியில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி சகுனி கார்த்திக் மற்றும் முத்து இருளாண்டி ஆகியோர் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டனர். சகுனி கார்த்திக் ஏற்கெனவே தேடப்பபட்டுவந்த குற்றவாளி என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஆடியோ பதிவு வெளியாகியிருக்கிறது.
முதலில் சகுனி கார்த்திக்கின் கூட்டாளி ஒருவனிடம் காவல்துறை அதிகாரி பேசுவது அந்த ஆடியோவில் பதிவாகி இருக்கிறது. எந்த வழக்கிலும் ஏன் ஆஜராகவில்லை, எத்தனை முறை சொல்வது? என்று காவல் ஆய்வாளர் கேட்க, நாங்களும் மனிதர்கள்தானே? ஏன் இத்தனை முறை தொந்தரவு செய்கிறீர்கள் என சகுனி கார்த்திக் கூட்டாளி கூறுகிறார்.
ஆனால், சகுனி கார்த்திக் பேசத் தொடங்கும்போதே, காவல்துறை அதிகாரியை மிரட்டத் தொடங்குகிறார். முடிந்தால் பிடிக்குமாறு சவால் விடுக்கிறார். கடைகள் மீது தாக்குதல் நடத்தியது ஏன் என்று காவல் அதிகாரி கேட்டதற்கு, வேண்டுமென்றேதான் அடித்தேன், முடிந்தால் வந்து பிடித்துக் கொள்ளுங்கள் என சகுனி கார்த்திக் தெரிவிக்கிறார்.
வருவேன், தயாராக இருங்கள்; 10 நாளில் சம்பவம் நடக்க போகிறது. முடிந்தால் தடுத்துக்கொள்ளுங்கள் என்று காவல் அதிகாரியை மிரட்டும் வகையில் பேசுகிறார் சகுனி கார்த்திக். மதுரையையே பரபரப்பாக்கிய என்கவுண்ட்டர் தொடர்பாக இந்த ஆடியோ பதிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Loading More post
இனி புதிய ஸ்டைலில் ரேஷன் கட்டிடம்.. தமிழக அரசு வெளியிட்ட மாதிரி வரைபடம்
’பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம்; ஓபிஎஸ்ஸை தாக்க திட்டம் தீட்டி இருந்தனர்’ - புகழேந்தி
சம்பளப் பணம், வேலை நேரம்-ல் பெரிய மாற்றம்.. புதிய தொழிலாளர் விதிகள் சொல்வதென்ன?
சென்னை கேகே நகரில் மரம் விழுந்து பெண் வங்கி மேலாளர் பலி
``உதயநிதி, இன்பநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் திமுகவை பார்க்கிறோம்”- சி.வி.சண்முகம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி