[X] Close

இலங்கை வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. பொன்.ராதாகிருஷ்ணன்

Pon-Radhakrishnan-condemn-for-attack-on-TN-Fishermen

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு இலங்கை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் & தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும் இதற்காக இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை பாஜக அரசு கொண்டு வரவில்லை எனக் கூறிய அவர், தமிழகத்தை மத்திய அரசு எந்த வகையில் புறக்கணித்தது என கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


Advertisement

முன்னதாக, இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த ‌தமிழ‌க மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு மீனவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Advertisement

Advertisement
[X] Close