Published : 04,Mar 2018 04:33 AM

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே ஒருவர் தற்கொலை 

Man-shot-himself-outside-White-House

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே அடையாளம் தெரியாத நபர் தற்கொலை செய்து கொண்டார்.

வெள்ளை மாளிகை வடக்குச் சுற்றுச் சுவர் அருகே துப்பாக்கியுடன் வந்த அந்த மர்ம நபர் திடீரென தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். மக்கள் கூட்டம் அதிகம் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்த போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இல்லை என காவல் துறையினர் தெரிவித்தனர். 

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாகவே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் வெள்ளை மாளிகை அருகே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் ஒரு கார் மோதியது. இச்சம்பவத்தில் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்ற சம்பவத்தில் ஒரு இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்