[X] Close

பயமா? ரெய்னாவுக்கா?: ரவிசாஸ்திரி புகழாரம்

Coach-Ravi-Shastri-Calls-Suresh-Raina--Fearless--Cricketer

சுரேஷ் ரெய்னா ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரர் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.


Advertisement

அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா ஒராண்டு இடைவெளிக்குப் பின்னர் இந்திய அணியில் இணைந்தார். மோசமான ஃபார்மால் இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட ரெய்னாவுக்கு யோ- யோ டெஸ்ட் வில்லனாக வந்தது. கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு யோ-யோ டெஸ்ட்டில் பாஸ் செய்தார். பின்னர் உள்ளூர் போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தை காட்டி தேர்வுக்குழுவினரின் பார்வையை இழுத்தார். இதன்பின்னர் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் டிக் அடிக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிக்கு அழைக்கப்பட்டார். 3 போட்டிகளில் 89 ரன்கள் குவித்தார். கடைசிப் போட்டியில் அதிரடி காட்டிய ரெய்னா 27 பந்துகளில் 43 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார்.


Advertisement

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா குறிந்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், ரெய்னா ஆக்ரோஷமான வீரர். பயமின்றி விளையாடக்கூடியவர். ரெய்னாவிடம் எனக்கு பிடித்ததும் அதுதான். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நீங்கள் அணிக்கு திரும்பும் போது உங்கள் இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக விளையாட வேண்டும். அது உங்களுக்கு மேலும் அழுத்தத்தை கொடுக்கும். ஆனால் ரெய்னா அவ்வாறு இல்லை. தனக்கே உரித்தான ஸ்டைலில் விளையாடினார். அது மிகவும் நன்றாக இருந்தது எனக் கூறினார்.

ரெய்னாவின் இந்த அதிரடி ஆட்டம் இந்திய அணியில் அவரை மீண்டும் இடம் பெற செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் தான் இலங்கையில் நடக்கவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ரெய்னா ஃபார்ம்க்கு திருப்பியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சின்ன தலனா சும்மாவா என இப்போதே ட்விட்டரில் புகழ ஆரம்பித்து விட்டனர். ஏப்ரலில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் இரண்டாண்டு தடைக்கு பின்னர் சென்னை அணி களமிறங்குவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close