Published : 03,Mar 2018 01:48 PM

சிறிய கட்சிகளின் தயவில் மேகாலயாவில் ஆட்சி: காங்கிரஸ் வியூகம்

Meghalaya-Assembly-Election-results-2018--Hung-House-in-state-Congress-emerges-as-largest-party-with-21-seats

மேகாலயா சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 21 இடங்களை பெற்று, அதிக இடங்களை பிடித்த கட்சியாக மாறி உள்ளது. இந்நிலையில் பாஜகவின் கோவா பார்முலா திட்டத்தை முறியடித்து ஆட்சியை பிடித்தே ஆக வேண்டுமென்ற டார்க்கெட் உடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களான அகமது பட்டேல், கமல்நாத், முகுல் வாஸ்னிக் ஷில்லாங்க் சென்றனர்.
 
தற்போது பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆட்சியில் பங்கு கொடுத்து, கூட்டணி ஆட்சிக்கு கட்சி மேலிடம் இசைவு தெரிவித்துள்ளதாக நம்பப்படுகிறது. குறிப்பாக மேகாலயாவில் ஆட்சியமைக்க 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. அதன்படி காங்கிரஸ் 21 எம்.எல்.ஏக்கள், ஐக்கிய ஜனநயக கட்சி (UDP) 6  எம்.எல்.ஏக்கள், 3 சுயேட்சைகள், மலை மாநில மக்களின் ஜனநாயக கட்சியின் (HSPDP) 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவை பெற்று ஆட்சியமைக்க காங்கிரஸ் நடத்திய பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை யாராவது காலை வார வாய்ப்புள்ளது என்பதால், இன்னும் சில 1 எம்.எல்.ஏக்களை கொண்ட இரண்டு கட்சிகளோடும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

        

இதற்கிடையில் பாஜகவும் தனது பேச்சுவார்த்தையை நடத்துவதால், சுயேட்சைகள் இடம் மாற வாய்ப்புள்ளது எனவும் பேசப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்