Published : 03,Mar 2018 09:58 AM

மேகாலயாவில் யார் ஆட்சி ? தீர்மானிக்கும் இடத்தில் சிறிய கட்சிகள்

BJP-Congress-Scramble-Top-Leaders-As-Meghalaya-Heads-For-Hung-House

மேகாலயா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில் எப்படியாவது கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க வேண்டுமென தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் முடிவெடுத்துள்ளன. இந்தப் போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற கோஷத்தை பாஜக முன்மொழிந்த நாள் முதல், காங்கிரஸ் தோல்விகளையே பெரும்பாலும் சந்தித்து வருகிறது.  

இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநில தேர்தல்களில் பாஜக ஆட்சி அமைக்கும் எண்ணத்தோடு களம் கண்டது. அதற்கான பலனை அனுபவிக்கும் வகையில் திரிபுராவில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. ஆனால், அதனை பெரிய அளவில் கொண்டாடாமல் மேகாலயாவுக்கு தனது சகாக்களை அனுப்பி இருக்கிறார் மோடி.

யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையை நோக்கி நகர்வதால், கூட்டணி ஆட்சி மட்டுமே அங்கு சாத்தியம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளூர் கட்சிகளான யூ.டி.எஃப் மற்றும் பி.டி.எஃப் ஆகியவை குறிப்பிடத்தக்க இடங்களை பெற்று வருகின்றன. அதாவது மேகாலயாவில் ஆட்சி அமைக்க 30 இடங்கள் தேவைப்படும். இதில் காங்கிரஸ் 20 இடங்களை பெறலாம். என்.பி,பி 20 இடங்களை பெறலாம். அடுத்த 10 இடங்களை கூட்டணி மூலம் மட்டுமே பெற முடியும்.

இதில் யூ.டி.பி கட்சி  6 இடங்களையும், பி.டி.எஃப் கட்சி 4 இடங்களையும் பெற்று உள்ளனர். இவர்கள் இருவரையும் யார் கவர்கிறார்களோ அவர்களே ஆட்சி அமைப்பார்கள். இந்நிலையில்தான் என்.பி.பி கட்சிக்கு ஆதரவாக களம் காண்கிறது பாஜக. தன்னிடம் உள்ள இரண்டு இடங்களைக் கொடுத்து ஆட்சியில் பங்கெடுக்க முயல்கிறது பாஜக. அதற்காக சிறிய கட்சிகளோடு பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தியும் வருகிறது. ஆட்சிக்கு யார் வர வேண்டும் என முடிவெடுக்கும் வலிமை தற்போது சிறிய கட்சிகள் பக்கம் உள்ளது. பாஜக கூட்டணியா ? காங்கிரஸ் கூட்டணியா ? கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்