[X] Close

ஊழல் புகார் கூறி அரசு மீது களங்கம் ஏற்படுத்த முயற்சி: ஜெயக்குமார்

Try-to-make-a-stigma-on-the-government-by-saying-corruption--Jayakumar

 


Advertisement

முதலமைச்சர் மீதான டெண்டர் ஊழல் குற்றச்சாட்டு அரசுக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறையை தனது பொறுப்பில் முதலமைச்சர் பழனிசாமி வைத்திருக்கும் நிலையில், சாலைப் பணிகளுக்கான டெண்டரை ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் கூறியுள்ளனர். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்திக்க வந்த வெற்றிவேலை வாயிற்பகுதியிலேயே காவல்துறையினர் தடுத்தனர். அதனால், காவல்துறையினரிடம் வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கோட்டை காவல்நிலையத்தில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், 7 தனிப்படைகளை அமைத்து இருவரையும் தேடிவருகின்றனர். 


Advertisement

இந்நிலையில் டிடிவி தினகரன் அணியினரின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், விதிகளின்படியே டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறினார். முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கூறினால் நீதிமன்றம் செல்லாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 


Advertisement

Advertisement
[X] Close