[X] Close

அஜித் வழியில் ‘அப்பா’ விஜய்

Thalapathy-Vijay-becomes-the-audience-

 


Advertisement

நடிகர் விஜய் தென்னிந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரம். இவர் படங்களில் வந்தாலும் சரி நேரில் வந்தாலும் சரி இவரை காண ஒரு ரசிகர் பட்டாளமே தவமாய் காத்திருக்கிறது. விஜய் ஒரு விளையாட்டு போட்டியில் சாதாரண பார்வையாளராக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அந்தப்புகைப்படத்தில் ஒரு ஓரத்தில் நிற்கிறார் விஜய். இது என்ன போட்டி? இங்கு ஏன் விஜய் ஒரு ஓரமாக நிற்கிறார் என கேள்வி எழும்.இது விஜய் மகள் திவ்யா பங்கேற்ற பேட்மிண்டன் போட்டி. என்னதான் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் எவ்வளவு வெற்றிகள் குவித்தாலும் தனது மகளின் வெற்றியை நேரில் கண்டு ரசிக்கும் ஒரு தந்தைக்கு கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானதுதான். 


Advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் அஜித் தனது மகளின் பள்ளி விழாவில் கலந்து கொண்டார். பைக் ரேஸரான அஜித் தனது மகனுக்காக டயர் வண்டி எல்லாம் ஓட்டினார். அப்போது அவரது எளிமையை பற்றி பலரும் பாராட்டினர். இப்போது அஜித் வழியை பின்பற்றி ‘அப்பா’ விஜய் களத்தில் குதித்துள்ளது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement
[X] Close